Wednesday, November 11, 2015

ATP Condemns the attack on Arundhathiyars by Paraiyars along with the support of the Party VCK

திண்டுக்கல் வேடசந்தூரில் அருந்ததியர் இளைஞர் மீது பறையர் சாதிவெறியர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதலை
ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
21.10.15 அன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள வெட்டல்நாயக்கன் பட்டியை சேர்ந்த அருந்ததியர் இளைஞர் பாலமுருகன் என்வருக்கும் பறையர் சாதிப்பெண் நதியா என்பவருக்கும் காதல் மணம் முடித்து வைத்த தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் போஸ் என்ற அருந்ததியர் இளைஞரை
வி.சி.கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன், புரட்சிப்பாரதம் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஏர்போர்ட்.மூர்த்தியின் பறையர் பேரவை இயக்க பொறுப்பாளர் பாக்கியராஜ்,
மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சார்ந்த அமல்ராஜ், பெரிய.பழனிச்சாமி, சின்ன.பழனிச்சாமி, எஸ்.பழனிசாமி, வேளாங்கண்ணி, முருகன், தன்ராஜ் ஆகிய பறையர் சாதி வெறியர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்யும் நோக்கத்தோடு கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த வன்செயலை வன்மையாக கண்டிப்பதோடு அனைவரையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும், அருந்ததியர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழக காவல்துறையை ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
காதல் திருமணத்திற்கு எதிராக சாதி இந்துக்களால் ஏவப்பட்ட குடிசைகள் எரிப்பு மற்றும் கோரப்படுகொலைகள்! இளவரசன் தொடங்கி கோகுல்ராஜ் வரை நீளும் அநாகரீகமான வன்செயல்களை கண்டித்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருபுறம் போராட்டங்களை நடத்திகொண்டிருக்கும் சூழலில்
விழுப்புரம் கச்சிராபாளயம் அருகே உள்ள கரடிச்சித்தூரில் பறையர் சாதிப்பெண் பரிமளா என்பவரை அருந்ததியர் இளைஞன் வீரன் என்பவர் காதலித்து இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போன காரணத்தால் பறையர் சாதிவெறியர்கள் அருந்ததியர் பெண்கள் நான்குபேரை மந்தையில் நிறுத்தி மனபங்கப்படுத்தி 19.வயது வெள்ளயம்மாள் என்பவரை படுகொலை செய்து 17.வயது நதியாவை மனநோயாளியாக்கியுள்ளது,
அதே விழுப்புரம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிநேயனூரை சேர்ந்த பறையர் சாதிப்பெண் கோகிலா என்பவரை அருந்ததியர் சாதிஇளைஞன் கார்த்திகேயன் என்பவர் காதலித்து மணம் முடித்த காரணத்தால் சொந்த சாதி கோகிலாவை கௌரவப்படுகொலை செய்தது,
தேனி சின்னமனூர் ஒன்றியம் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த 11.வயது அருந்ததியர் சிறுமி நந்தினியை மூன்று பறையர் சாதி இளைஞர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி படுகொலை செய்து, தனது பறையர் சாதித்திமிரை காட்டியது,
என நமக்கு தெரிந்த வகையில் அருந்ததியர் மக்கள் மீது இதுவரை பத்துக்கும் மேற்பட்ட வன்செயல்களை பறையர் சாதி வெறியர்கள் அருந்ததியர் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
அப்பேற்பட்ட வன்கொடுமைகளை கண்டிக்க வேண்டிய தலித் அமைப்பின் தலைவர்களும் பிற ஜனநாய சக்திகளும் தலித் ஒற்றுமை சிதையக்கூடாது என கண்டும் காணாமலும் விட்டதன் விளைவுதான் இப்போது வேடசந்தூர் அருந்ததியர் இளைஞர் மீதான பாய்ச்சல்
காதல் திருமணத்திற்கு எதிராகவும், தலித் மக்கள் மீது ஏவப்படும் சாதிஇந்துக்களின் வன்செயல்களையும் கண்டித்து நாம் அனைவரும் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கையில், அம்பேத்கரின் கொள்கை வழியில் இயக்கம் நடத்தும் தலித் அமைப்புகளின் நிர்வாகிகளே இப்படிப்பட்ட வன்செயல்களில் ஈடுபடுவதுதான் நமக்கு மிகவும் கவலையளிக்கின்றது.
ஈழப்பிரச்சினையில் எவ்வளவோ அக்கரைகாட்டும் இவர்கள்! இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? அரியானா ஃபரிபாத் மாவட்டம் சன்பேத் கிராமத்தில் ராஜ்புத் என்ற சாதிவெறியர்களால் இரண்டு தலித் குழந்தைகள் வீட்டோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு
"நாய்கள்" மீது யாரோ கல்லெறிந்தால் அரசாங்கம் எப்படி பொறுப்பேற்க முடியும்! என திமிரோடு பேசிய மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியது போல, இவர்களும் சொல்லிவிட்டு ஒதுங்கிகொள்ள போகின்றார்களா? இல்லை சொந்த சாதி உணர்வை தாண்டி நடவடிக்கையில் இறங்க போகிறார்களா? என்ற கேள்விகள்தான் நமக்கு எழுகிறது.
அருந்ததியர் இளைஞர் மீது பறையர் சாதி வெறியோடு கொலைவெறித் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படியும், கட்சிக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலும் உரிய நடவடிக்கை எடுப்பார் தோழர் திருமாவளவன் என நம்புகின்றோம். அதன் மூலம் தலித் ஒற்றுமை சிதையக்கூடாது எனவும் எதிர்பார்க்கின்றோம்.
இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை

No comments:


View My Stats