Friday, November 13, 2015

நாமக்கல்லில் அருந்ததியர் +2 மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்- சமூக நீதி இயக்கம்

Published on 24 May 2015
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மணி என்பவர் மகன் டேவிட் (ஏ) பத்மநாபன் (வயது 17) 17/5/2015அன்று கிணறு தூர்வாரும் வேலைக்கு விடுமுறையில் தன் தாத்தா உடன் சென்று இருந்த பொழுது, கிணறு உரிமையாளர் காளியண்ணன், டேவிட்யை ஜாதி பெயரயை சொல்லி தாக்கி கிணற்றில் தள்ளினார்.
இதில் நீரில்லா கிணற்றில் டேவிட் விழுந்ததில் இரு கால்கள், கை, தாடை எலும்பு, பற்கள் என பல்வேறு எலும்பு முறிவு மற்றும் பலத்த ரத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். இதுவரை 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது சமந்தமாக இன்று வரை பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய காவல் துறை மறுத்துவருகிறது.
- சமூக நீதி இயக்கம்
9865295889

அருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடை

அருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடைகட்டிய  திருமாவளவன் கும்பல்


--------------------------------------------------------------------------------
கீழ்சாதி பையனைக் காதலித்தால்
பறையர்கள் தங்கள் பெண்ணைக் 
கெளரவக் கொலை செய்வார்கள்
--------------------------------------------------------------------------------
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிநேயனூரைச் சேர்ந்த கோகிலா என்கிற பறையர் சமூகப் பெண்ணும்கார்த்திகேயன் என்கிற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனும் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே காதலித்திருக்கிறார்கள்.
இருவருமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காது என்பதால் ‡ கடலூரில் ரகசியமாக1.12.2010 அன்று அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
பெற்றோர் சம்மதம் கிடைக்கும்வரை அவரவர் வீட்டிலிருப்பது என முடிவெடுத்து அவரவர் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கோகிலாவின் பெற்றோருக்கு இவர்கள் காதல் விவகாரம்தெரிந்துவிடவே தங்கள் பறையர் சாதியிலேயே மாப்பிள்ளைப் பார்த்திருக்கினறனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோகிலாவை - ஒரு அறையில் அடைத்துவைத்து தற்கொலை செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளனர். இதனைத் தன் கணவர் கார்த்திகேயனுக்கு போன் செய்து தெரிவித்திருக்கிறார். 9.11.2012 இரவு கார்த்திகேயன் கோகிலாவுக்கு போன் செய்தபோது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்திருக்கிறது. காலையில் கோகிலா இறந்துவிட்டதாகக் கூறி - கோகிலா உடலைபெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள்.

இதனைக் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். கோகிலா வீட்டார் புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என கார்த்திகேயனை மிரட்டி வருகிறார்களாம்.
இது குறித்து கோகிலா வேலை செய்த மருந்து கடையில் அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது ""கோகிலா காதலித்தது உண்மைதான். கார்த்திகேயனுடன் திருமணம் நடந்ததாகவும் அவள் சொல்லி இருக்கிறாள். தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு அவள் கோழை இல்லை'' என்று கோகிலாவுடன் பணியாற்றியவர்கள் சோகத்துடன் சொன்னதாக ஜூ.வி.5.12.2012 செய்தி வெளியிட்டுள்ளது.
கீழ்சாதி பையனைக் காதலித்தால் பறையர்கள் தாம் பெற்ற பெண்களைக் கெளரவக் கொலையும் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பறையர் வீட்டுப் பெண்
அருந்ததியர் இளைஞனோடு ஓடி விட்டால்-
அந்த அருந்ததியர் வீட்டு பெண்களை
நிர்வாணப்படுத்தி
கும்பல் கற்பழிப்பு செய்து
கொலையும் செய்வார்கள் பறையர்கள்

விழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையம் சரகத்திற்கு உட்பட்ட கரடி சித்தூரில் -
அருந்ததியர் இளைஞன் வீரனும்
பறையர் சமூகப்பெண் பரிமளாவும் காதலர்கள். இதற்கு பறையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வீரனும் ‡ பரிமளாவும்6.8.2003 அன்று ஊரை விட்டு ஓடி விடுகின்றனர்.
இது பறையர்களுக்கு பெரிய மானப்பிரச்சனை ஆகி விடுகிறது.
இன்னும் மூன்று நாட்களுக்குள் இருவரையும் ஒப்படைக்காவிட்டால்அருந்ததியரின் வீடுகளையும் ஏலம் விட்டு ஊர்ப்பொதுவுக்குஎடுத்துக்கொள்வோம். உங்களையும் ஊரை விட்டே விரட்டி விடுவோம் என பறையர்கள் கும்பலாக வந்து அருந்ததியர்களை மிரட்டிவிட்டு செல்கிறார்கள் 9.8.2003 அன்று.

அருந்ததியர் குடும்பம் - பறையர்கள் சுமார் 500குடும்பம் பிற்பட்ட வகுப்பினர் சுமார் 1000 குடும்பம்.
இந்த மிரட்டலுக்குப் பயந்து வீரனின் அப்பாசித்தப்பாமற்றும் ஒருவரும் வீரனையும் பரிமளாவையும் தேடி சென்னைப் பக்கம் போய்விட்டனர்.
ஆகஸ்டு 12 ஆம் தேதி இரவு வீச்சரிவாளோடு குடித்துவிட்டு வந்த பறையர் கும்பல் ‡ வீட்டு முன் நின்று ஆபாசமாகத் திட்டிவிட்டு;அருகிலிருந்த வண்டி நுகத்தடியை எடுத்து கதவை உடைத்து உள்ளே புகுந்து நுகத்தடியால் அனைவரையும் தாக்கிவிட்டு 
மாயவன் மகள் நதியா (17 வயது) என்வரை இவதாண்டா அழகா இருக்கா முதலில் அவளைப் புடிங்கடா என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெண்ணை கீழே தள்ளி ‡ பாலியல் உறுப்புகளைக் கடித்துகசக்கி நாசப்படுத்தியுள்ளனர். நதியா சில நிமிடங்களில் மயக்கமுற்றிருக்கிறார்.
வீரனின் தங்கை கோவிந்தம்மாளை (வயது 16) நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். மார்பைக் கடித்துள்ளனர்.

வீரனின் தம்பி மனைவி கலா (19 வயது) கர்ப்பிணிப் பெண். அவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பறையராகிய பாலமுருகனைத் திருமணம் செய்து வாழ்பவர் அருந்ததியப் பெண் வெள்ளையம்மாள் (வயது 28) இவரது கணவர் பாலமுருகனைத் தூணில் கட்டிப்போட்டுவிட்டுஅந்தப் பெண்ணின் பெற்றோர் கண்முன்னாலேயே (சம்பவத்திற்கு சில நாட்கள் முன்புதான் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் வெள்ளையம்மாள்) நுகத்தடியால் வயிற்றிலும் இடுப்பிலும் தாக்கி இருக்கிறார்கள். மயககம் போட்டு விழுந்திருக்கிறார்.

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட சில நாட்களிலேயே இந்த தாக்குதல் நடந்ததால் படுத்த படுக்கையாகி - அடிக்கடி வயிற்று வலியால் துடித்து கண்பார்வையை இழந்து ஒரு மாதத்தில் 14.9.2003அன்று மரணமடைந்து விட்டார்.

இந்தக் கற்பழிப்புபெண்வதை பெண் கொலை ஆகியவற்றை செய்த பறையர்கள் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் நதியாவை விழுப்புரம் மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்கள். நதியா மனச்சிதைவுக்க உள்ளாகிப் போனதால் பாண்டிச்சேரி மருத்துவமனையில் இதற்காக சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார்.

""தலித் மக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் செய்யும் இதர ஆதிக்க சாதியினர் எவ்வாறு நடந்து கொள்வார்களோஅதைவிட அருந்ததியருக்கு வன்கொடுமை செய்பவர்களாக பறையர்கள்இருக்கிறார்கள்''
என்கிறது உண்மையறியும் குழுவின் அறிக்கை.

ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான் தலைமையில்எழில் இளங்கோவன்பேரா.கல்யாணிபேரா.அ.மார்க்ஸ்தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் ஆகியோர் அடங்கிய உண்மையறியும் குழு வெளியிட்ட அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பவையே மேற்கண்டவை.

நிலமை இவ்வாறு இருக்கையில் -
வன்னியர்கள் சாதிவெறியர்கள்சாதிவெறி காரணமாக தன் பெண் ஒரு பறையரைக் காதலித்தால் என்பதற்காக பெற்றவர்களே தன் மகளை கெளரவக் கொலை செய்பவர்கள் வன்னியர்கள் அவர்கள் கட்சியும் சாதி வெறிக் கட்சி. பறையர்கள் உண்மையான காதலர்கள்என்றொரு கதையை "பெத்தவன்என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கிறார் இமையம் என்ற பறையர் வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஒரு வன்னியக் கவிஞர் - எரியும் ஒரு பிரச்சçயை எழுதும் துணிச்சல் மிக்க வீரன் இமையம் என வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.

இமையம் நியாயப் புத்தி உள்ளவராக இருந்திருந்தால் - கரடிசித்தூரில் பறையர்கள் அருந்ததியருக்கு செய்த கொடுமைகளை வைத்து "பெத்தவன்கதையை எழுதி இருக்க வேண்டும்.

எரியும் பிரச்சனையை எழுதிய துணிச்சலான வீரன் என இமையத்தை புகழ்பாடிய அந்தக் கவிஞர் - தனக்கு துணிச்சல் இருந்திருந்தால் கரடிசித்தூரில் பறையர்கள் அருந்ததிய மக்களைப் படுத்திய பாடு குறித்து ஒரு கதை எழுதி வெளியிட்டு ‡ இமையத்தை அழைத்து பேச வைக்கட்டும். பாராட்டுவாரா இமையம் இந்தக் கவிஞரை?
இந்த யதார்த்தமான நிலையை எண்ணிப்பார்த்து - தன்மான உணர்ச்சி பெற வேண்டும் நம் கவிஞர்கள்.

அதில்லாமல் திருமாவளவனும் இமையமும் சவாரி செய்ய நம் கவிஞர்கள் கழுதைகளாகிக் காத்து நிற்பது தன்மானத்திற்கு அடையாளமல்ல.
-
தருமபுரி கலவரம் குறித்து - கண்மணிகள் காதலால் வெண்மணிகள் தொடரலாமா என வரட்டு வசனம் எழுதிய கருணாநிதி -
கரடிசித்தூர் பறையர்கள் கொடுமை குறித்து வாய் திறவாதது ஏன்?
தருமபுரி கலவரம் குறித்து - புலிவேசம் போடும் நல்லகண்ணுவும்;தா.பாண்டியனும்ராமகிருஷ்ணனும் -
பறையர்கள் நடத்திய கரடிசித்தூர் அராஜகங்களை காண முடியாத குருட்டுப் பூனைகளாய் இருட்டில் முடங்கிக் கிடந்தது ஏன்?
தருமபுரி கலவரம் குறித்து -
காதலை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என முச்சந்தியில் நின்று போலிக் கூச்சலிடும் திருமாவளவன்-
கரடிசித்தூரிலும்பள்ளிநேயனூரிலும் தன் கட்சிக்காரர்கள் காதலுக்கு பாடைக்கட்டிக் கொண்டிருப்பதை முதலில் கண்டிக்கட்டும்.
பறையர்கள் தங்கள் பெண்களை அருந்ததியருக்கே கொடுக்க வேண்டும். பறையர்கள் தங்கள் மகன்களுக்கு அருந்ததியப் பெண்களையே கட்ட வேண்டும் என கட்டளையிட்டு தன் புரட்சியை முதலில்அங்கிருந்து தொடங்கட்டும் திருமாவளவன்.

தன் கீழ் இருப்பவர்களை மிதித்துக்கொண்டுதன் மேலிருப்பவர்களை மிரட்டுவது தலைவனாவதற்கான வழியல்ல
http://karuppurojakal.blogspot.in/2013/02/blog-post_15.html

Periyar Mulakam: ‘அருந்ததியினர்’ மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள வெட்டல் நாயக்கன்பட்டியைச் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பாலமுருகன் என்பவருக்கும் ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தைச் சார்ந்த நதியா என்பவருக்கும் காதல் திருமணத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சார்ந்த மாவட்ட செயலாளர் போஸ் (இவர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்) நடத்தி வைத்துள்ளார்.
இதற்காக விடுதலை சிறுத்தைகள், புரட்சிப் பாரதம், பறையர் பேரவை அமைப்பைச் சார்ந்தவர்கள், அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த போஸ் என்ற தோழரை கொடூரமாக கொலை வெறியோடு தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன.
இதேபோன்று விழுப்புரம் கச்சிராப்பாளையம் அருகே உள்ள கரடி சித்தூரில் ஆதிதிராவிடர் பரிமளா என்பவரை (பறையர் சமூகம்) அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞன் வீரன் என்பவர் காதலித்து இருவரும் ஊரை விட்டே ஓட நேர்ந்தது. தொடர்ந்து அருந்ததியர் சமூகப் பெண்கள் நான்கு பேரை மந்தையில் நிறுத்தி மானபங்கப்படுத்தி, 19 வயது வெள்ளையம்மாள் என்பவரை படுகொலை செய்ததாகவும், 17 வயது நதியாவை மனநோய்க்கு உள்ளாக்கியதாகவும் செய்திகள் வந்தன.
விழுப்புரம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளி நேயனூரை சேர்ந்த ஆதி திராவிடர் சாதிப் பெண் (பறையர்) கோகிலா என்பவரை அருந்ததியர் சாதி இளைஞன் கார்த்திகேயன் என்பவர் காதலித்து மணம் முடித்த காரணத்தால் சொந்த சாதி கோகிலாவை கவுரவப் படுகொலை செய்த தகவல் வந்தது.
தேனி சின்னமனூர் ஒன்றியம் காட்சிபுரம் பகுதியை சேர்ந்த 11 வயது அருந்ததியர் சிறுமி நந்தினியை மூன்று ஆதி திராவிடர் (பறையர்) சாதி இளைஞர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி படுகொலை செய் துள்ளார்கள்.
ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஜாதி வெறியைக் கண்டித்துப் போராட வேண்டிய வர்கள், தங்களுக்கும் ‘கீழாக’ அருந்ததியரைக் கருதி அவர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்துவது ஜாதி எதிர்ப்புக் கொள்கைக்கே ஊறு விளைவிக்கும் செயல். தலித் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் ஆதிக்க ஜாதியினரின் செயலுக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
இப்படி தலித் மக்களுக்குள்ளேயே தங்களை ‘உயர்ஜாதி’ மனநிலைக்கு உள்ளாக்கிக் கொண்டு வன்முறையைக் கையில் எடுப்பவர்களை தலித் அமைப்புகளின் தலைவர்கள் ஏன் கண்டிக்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்? என்று ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் எழுப்பிய கேள்வியில் முழுமையான நியாயம் இருக்கிறது என்பதே நமது உறுதியான கருத்து.
தலித் அடையாளத்துக்குள் நிறுத்தப்பட்டுள்ள பறையர், அருந்ததினருக்கு இடையே மோதல்களும், மற்றொரு பிரிவினரான ‘தேவேந்திர குல வேளாளர்’ பிரிவைச் சார்ந்த சிலர் தாங்கள் ‘தலித்’ பிரிவினரை விட உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ள விரும்புவதும், ஜாதியமைப்புக்கு வலிமை சேர்க்கும் போக்கே ஆகும். அம்பேத்கர் வாழ்நாள் முழுதும் போராடிய கொள்கைக்கு குழி பறிப்பதுமாகும்.
பார்ப்பனியத்தால் உந்தப்பட்ட ஆதிக்க ஜாதி வெறி சக்திகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் திராவிடர் விடுதலைக் கழகம், இந்த உண்மையை - அது கசப்பானதாக இருந்தாலும் வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறது. இதைக் கண்டும் காணாமல் மவுனம் காத்து, கடந்துபோக நினைப்பது, ஜாதி எதிர்ப்புக் கொள்கைக்கு நேர்மை சேர்ப்பதாகவும் ஆகாது.
இந்த உள்ஜாதி மோதல்களை தடுத்து நிறுத்த அருந்ததினருக்கு எதிரான வன்முறைகளைக் கண்டிக்க  தலித் தலைவர்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/pm-oct15/29544-2015-11-04-08-58-27

Udumalaipettai: Arundhathiyars attacked by Gownders

உடுமலைப்பேட்டை அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக இளைஞர்கள் ராஜன், செந்தில், லட்சுமி, ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதி கவுண்டர் பூமிநாதன் என்பவர் சாதியைச் சொல்லி திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார், மேற்படி சம்பவம் தொடர்பாக உடனடியாக ஆதித் தமிழர் பேரவை சார்பாக மாநில துனைப் பொதுச்செயலாளர், மா.ஈழவேந்தன் , கோவை மாவட்டச் செயலாளர், ரா.கருப்புசாமி, தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைத்து காவல்நிலைய குற்ற எண் 535/15 U/S 447 ,324,506(2),IPCமற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(1),3(2),(V)(a),SC/ST(POA) AMENDMENT ORDINANCE 2015 ன் படி வழக்கு பதிவு செய்தும் எதிரியை கைது செய்ய வைத்தோம் 
தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதித் தமிழர் பேரவை பாதுகாப்பாக உள்ளது அங்குள்ள ஆதிக்க சாதிகளை கலக்கமடைய வைத்துள்ளது


https://www.facebook.com/profile.php?id=100008930052128&fref=ts

Sanitary worker died with electric shock from a garbage binமதுரையில் மீண்டும் ஒரு தூய்மை தொழிலாளி கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி மரணம்.
""""""""""""""""""""""""
மதுரை கிழக்கு மண்டலத்தில் தூய்மை தொழிலாராக பணியாற்றி வந்த அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியை சேர்ந்த தற்காலிக தூய்மை தொழிலாளி 29 வயது முத்து என்பவர் இன்று மதியம் 1.10 மணியளவில் மதுரை கணேஷ் திரையரங்கம் அருகில் குப்பைத்தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

மதுரை கிழக்கு மண்டலம்(3)
முத்து(27) பெருமாள் வெள்ளகல்
இன்று மதியம் 1,10 மணிக்கு குப்பை பெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி முத்து பரிதாபமாக உயிரிளந்தார்
இது சம்மந்தமாக அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து அரசு அதிகாரிகலிடம்
மூன்று அம்ச கோரிக்கை முன்வைத்தனர்
1) இறந்த முத்து அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
2) 10 லட்சம் நிவாரண நிதி
3) இறுதி சடங்கு செய்ய 20 ஆயிரம் ரூபாய் உடனே வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது
மேலும் மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் 3 வது மண்டலத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
தூய்மை தொழிலாளி முத்துவின் மரணத்திற்கு நீதிகேட்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுருத்தி ஆதித்தமிழர் பேரவை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் இரா.செல்வம் அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கின்றார்.
கோரிக்கைகள்
""""""""""""""""""""""""
1) இறந்தவரின் குடும்பத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை 10 லட்சத்தை உடனே வழங்க வேண்டும்.
2) இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை உடனேவழங்க வேண்டும்.
3) இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய அரசு வழங்கும் 20 ஆயிரம் ஈமசடங்கு தொகையை உடனே வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தற்போது 3 வது மண்டலத்தில் தோழர்கள் போராட்டத்தின் எதிரொலியாக...
கடந்த 16.10.2015 அன்று ஆரப்பளையத்தில் கழிவடைப்பை நீக்கும் போது உயிரிழந்த விஸ்வநாதன், முனியாண்டி குடும்பத்தாருக்கு அவசரம் அவசரமாக 10 லட்சம் இழப்பீட்டு தொகையை கொண்டு போய் கொடுக்கின்றது நிர்வாகம்.
இந்நிலையில் முத்துவின் மரணத்திற்கு நீதிகிடைக்கும் வரை போரட்டத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என்று ஆதித்தமிழர் பேரவையினர் போராட்ட களத்தில் நிற்கின்றனர்.
==>தகவல்
இரா.செல்வம், செயலாளர்,
மதுரை தெற்கு மாவட்டம்.
ஆதித்தமிழர் பேரவை

https://www.facebook.com/veeraarunthathiyan

Mosquito spray vehicle
https://www.facebook.com/veeraarunthathiyan

arundhathiyar school student is forced to remove human feces by a gownder school teacher

சாதிவெறிபிடித்த கவுண்டர்சாதி ஆசிரியையின் சாதிவெறியாட்டம்
ஆதித்தமிழர் பேரவை வண்மையாக கண்டிக்கிறது மற்றும் இப்போது போராட்ட களத்தில்
"""""""""""""""""""
நாமக்கல் ராமாவரம் நாகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் அருந்ததியர் மாணவன் சசிதரனை, பிறசாதி மாணவன் கழித்த மலத்தை அள்ள வைத்து கட்டாயப்படுத்தியுள்ளார் கவுண்டர் சாதியை சேர்ந்த ஆசிரியை விஜயலட்சுமி.
இந்த சாதிவெறி ஆதிக்கத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் போராட்ட களத்தில் உள்ளனர்.
மற்றவன் கழித்த மலத்தை அருந்ததியர் மாணவனை அள்ள வைத்து ரசிக்கும் ஆசிரியரின் சாதிவெறிப் புத்தி, திண்ணியத்தில் வாயில் மலத்தை திணித்த சாதிவெறியர்களின் காட்டுத்தனத்தையும் மிஞ்சிவிட்டது.
இந்த வன்கொடுமைக்கு எதிராக ஆளும் அரசு நடவடிக்கை எடுக்குமா? இல்லை
எப்போதும் போல் ஆதிக்க சாதிகளின் பின்னால் நின்றுகொண்டு வன்கொடுமைகளை ஊக்கப்ப்டுத்துமா?
தீண்டாமை ஒரு பாவச்செயல்!
தீண்ட்டாமை ஒரு பெருங்குற்றம்!!
தீண்டாமை தண்டனைக்குறியது!! என
ஆண்டுக்கு ஒருமுறை உறுதியேற்கும் ஆசிரியரே இப்படி சாதிவெறிப் புத்தியோடு அலைந்தால் படிக்கும் மாணவர்கள் மத்தியில் எந்த அறிவு வளரும்.
தமிழக அரசே! காவல்துறையே!!
=>வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி சாதிவெறி விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடு! உடனே கைதுசெய்!
=>ஆசிரியை பதவியிலிருந்து உடனே! பணிநீக்கம் செய்!
=>ஆதித்தமிழர் பேரவை.
13.11.2015
https://www.facebook.com/veeraarunthathiyan
ஆசிரியை விஜயலட்சுமி கைது.
""""""""""""
நாமக்கல் ராமாவரம் நாகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் அருந்ததியர் மாணவன் சசிதரனை, பிறசாதி மாணவன் கழித்த மலத்தை அள்ள வைத்த 
கவுண்டர் சாதியை சேர்ந்த ஆசிரியை விஜயலட்சுமி. ஆதித்தமிழர் பேரவை தோழர்களின் போராட்டத்தின் காரணமாக தற்போது கைது. பணியிடைநிக்கம் செய்யப்பட்டார்.
Wednesday, November 11, 2015

ATP condemns Pallars attack on Arundhathiyars

'அய்யா' அதியமான் அறிக்கை
"'"''''''''''''''''’'"""''
அருந்ததியர் மக்கள் மீது தொடரும் பள்ளர்சாதி வெறியாட்டத்தை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக
கண்டிக்கின்றது.
""""""""""""""""""""""""""""
மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அலங்காநல்லூர் அதலை அருகில் உள்ள பட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த புதியதமிழகம் கட்சியின் ஆதரவாளர் ராஜா என்பவர். பள்ளர்சாதி வெறியோடு பக்கத்து ஊர் புதூரை சேர்ந்த பள்ளர்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அருந்ததியர் மக்கள் மீது வன்முறை கொலை வெறியாட்டம் நடத்தியுள்ளார். இந்த வன்செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
25 குடுப்பங்களே உள்ள அருந்ததியர் மக்களை பட்டக்குறிச்சி மற்றும் புதூரை சேர்ந்த பள்ளர்கள் கும்பலாக ஒன்று கூடி கொடிய ஆயுதங்களுடன் கொடூரத்தாக்குதல் நடத்தியதில் 3 பெண்கள் உட்பட 9 பேர் மண்டை, கை கால்கள் உடைபட்டு தற்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடெங்கும் நடந்தேறும் ஆதிக்க சாதிவெறியர்களின் சாதிஆதிக்க வெறியாட்டங்களை கண்டித்து, தலித்மக்கள் ஒன்றுசேர்ந்து தொடர் போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கும் சூழலில், அருந்ததியர் மக்கள் மீது பள்ளர்களும் பறையர்களும் நடத்திடும் வன்முறை வெறியாட்டங்கள் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி தலித் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றது.
பரமக்குடி துப்பாக்கி சூடு, தாமிரபரணி படுகொலை, கொடியங்குளம் சொத்துக்கள் சூறை, புளியங்குடி கழுத்தறுப்பு, என நடந்தேறிய பள்ளர்கள் மீதான வன்செயல்களுக்கு எதிரான போராட்ட களத்தில் பள்ளர்களுக்கு துணையாக நின்ற அருந்ததியர் மக்கள் மீது பள்ளர்கள் காட்டும் சாதிவெறி போக்கு மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.
மத்தியில் ஆளும் மதவாத பாரதிய ஜனதா கட்சியின் மதவெறி, சாதிவெறி சதிக்கு வழு சேர்க்கின்ற விதமாக, தலித்துகளில் இருந்து விடுபட்டு பிற்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்ற, ஒரு சில பள்ளர்சாதி தலைவர்களின் முயற்சியின் காரணமாக பாஜக தலைவர் அமிக்சா பங்கேற்ற மதுரை மாநாட்டின் எதிரொளியாக இது போன்ற சம்பவங்கள் நடந்தேறுகிறதோ! என்ற சந்தேகம் நமக்குள் எழத்தான் செய்கின்றது.
மதவெறியும் சாதிவெறியும் மட்டுப்பட்டு கிடந்த பெரியார் பிறந்த தமிழக மண்ணில் ஆங்காங்கே தலைதூக்கும் ஆதிக்க சாதிவெறியர்களின் வன்கொடுமை கொலை வெறியாட்டங்களை போல் பள்ளர், பறையர் சாதியினரும் காட்டும் சாதி வெறியாட்டம் சங்பரிவார அமைப்புகளின் சதிக்கு துணை போவதாக அமைந்துவிடும்.
அருந்ததியர் மக்கள் மீது பள்ளர் சாதிவெறியர்கள் நடத்திய சாதிவெறியாட்டத்தை சமூகநீதி பார்வையுள்ள தலித் தலைவர்கள் கண்டிக்காமல்! கண்டும் காணாமல் விடுவது மதவாத சாதிய சக்திகளுக்கு சாதகமாக அமைந்து தலித் ஒற்றுமை சிதைத்து விடும் என்பதே நமது கவலை.
எனவே அருந்ததியர் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பள்ளர் சாதிவெறியர்களை தனிமைபடுத்தி அவர்களை தண்டணைக்கு உட்படுத்துவதற்கு தலித் இயக்க தலைவர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தலித் ஒற்றுமை வழுப்பட்டு சமூகநீதி கோரிக்கையை வென்றெக்கும் போராட்ட களத்தில் வெற்றி காணமுடியும், என தோழமையுடன் தலித் இயக்க தலைவர்களை கேட்டு கொள்கிறேன்.
அருந்ததியர் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ராஜா தலைமையிலான பள்ளர்சாதி வெறியர்கள் அனவரையும் உடனே கைது செய்ய வேண்டும் எனவும், அருந்ததியர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதோடு காவல்துறை உயர் அதிகாரிகளின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
இவண்.
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை. 

ATP Condemns the attack on Arundhathiyars by Paraiyars along with the support of the Party VCK

திண்டுக்கல் வேடசந்தூரில் அருந்ததியர் இளைஞர் மீது பறையர் சாதிவெறியர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதலை
ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
21.10.15 அன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள வெட்டல்நாயக்கன் பட்டியை சேர்ந்த அருந்ததியர் இளைஞர் பாலமுருகன் என்வருக்கும் பறையர் சாதிப்பெண் நதியா என்பவருக்கும் காதல் மணம் முடித்து வைத்த தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் போஸ் என்ற அருந்ததியர் இளைஞரை
வி.சி.கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன், புரட்சிப்பாரதம் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஏர்போர்ட்.மூர்த்தியின் பறையர் பேரவை இயக்க பொறுப்பாளர் பாக்கியராஜ்,
மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சார்ந்த அமல்ராஜ், பெரிய.பழனிச்சாமி, சின்ன.பழனிச்சாமி, எஸ்.பழனிசாமி, வேளாங்கண்ணி, முருகன், தன்ராஜ் ஆகிய பறையர் சாதி வெறியர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்யும் நோக்கத்தோடு கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த வன்செயலை வன்மையாக கண்டிப்பதோடு அனைவரையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும், அருந்ததியர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழக காவல்துறையை ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
காதல் திருமணத்திற்கு எதிராக சாதி இந்துக்களால் ஏவப்பட்ட குடிசைகள் எரிப்பு மற்றும் கோரப்படுகொலைகள்! இளவரசன் தொடங்கி கோகுல்ராஜ் வரை நீளும் அநாகரீகமான வன்செயல்களை கண்டித்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருபுறம் போராட்டங்களை நடத்திகொண்டிருக்கும் சூழலில்
விழுப்புரம் கச்சிராபாளயம் அருகே உள்ள கரடிச்சித்தூரில் பறையர் சாதிப்பெண் பரிமளா என்பவரை அருந்ததியர் இளைஞன் வீரன் என்பவர் காதலித்து இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போன காரணத்தால் பறையர் சாதிவெறியர்கள் அருந்ததியர் பெண்கள் நான்குபேரை மந்தையில் நிறுத்தி மனபங்கப்படுத்தி 19.வயது வெள்ளயம்மாள் என்பவரை படுகொலை செய்து 17.வயது நதியாவை மனநோயாளியாக்கியுள்ளது,
அதே விழுப்புரம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிநேயனூரை சேர்ந்த பறையர் சாதிப்பெண் கோகிலா என்பவரை அருந்ததியர் சாதிஇளைஞன் கார்த்திகேயன் என்பவர் காதலித்து மணம் முடித்த காரணத்தால் சொந்த சாதி கோகிலாவை கௌரவப்படுகொலை செய்தது,
தேனி சின்னமனூர் ஒன்றியம் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த 11.வயது அருந்ததியர் சிறுமி நந்தினியை மூன்று பறையர் சாதி இளைஞர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி படுகொலை செய்து, தனது பறையர் சாதித்திமிரை காட்டியது,
என நமக்கு தெரிந்த வகையில் அருந்ததியர் மக்கள் மீது இதுவரை பத்துக்கும் மேற்பட்ட வன்செயல்களை பறையர் சாதி வெறியர்கள் அருந்ததியர் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
அப்பேற்பட்ட வன்கொடுமைகளை கண்டிக்க வேண்டிய தலித் அமைப்பின் தலைவர்களும் பிற ஜனநாய சக்திகளும் தலித் ஒற்றுமை சிதையக்கூடாது என கண்டும் காணாமலும் விட்டதன் விளைவுதான் இப்போது வேடசந்தூர் அருந்ததியர் இளைஞர் மீதான பாய்ச்சல்
காதல் திருமணத்திற்கு எதிராகவும், தலித் மக்கள் மீது ஏவப்படும் சாதிஇந்துக்களின் வன்செயல்களையும் கண்டித்து நாம் அனைவரும் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கையில், அம்பேத்கரின் கொள்கை வழியில் இயக்கம் நடத்தும் தலித் அமைப்புகளின் நிர்வாகிகளே இப்படிப்பட்ட வன்செயல்களில் ஈடுபடுவதுதான் நமக்கு மிகவும் கவலையளிக்கின்றது.
ஈழப்பிரச்சினையில் எவ்வளவோ அக்கரைகாட்டும் இவர்கள்! இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? அரியானா ஃபரிபாத் மாவட்டம் சன்பேத் கிராமத்தில் ராஜ்புத் என்ற சாதிவெறியர்களால் இரண்டு தலித் குழந்தைகள் வீட்டோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு
"நாய்கள்" மீது யாரோ கல்லெறிந்தால் அரசாங்கம் எப்படி பொறுப்பேற்க முடியும்! என திமிரோடு பேசிய மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியது போல, இவர்களும் சொல்லிவிட்டு ஒதுங்கிகொள்ள போகின்றார்களா? இல்லை சொந்த சாதி உணர்வை தாண்டி நடவடிக்கையில் இறங்க போகிறார்களா? என்ற கேள்விகள்தான் நமக்கு எழுகிறது.
அருந்ததியர் இளைஞர் மீது பறையர் சாதி வெறியோடு கொலைவெறித் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படியும், கட்சிக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலும் உரிய நடவடிக்கை எடுப்பார் தோழர் திருமாவளவன் என நம்புகின்றோம். அதன் மூலம் தலித் ஒற்றுமை சிதையக்கூடாது எனவும் எதிர்பார்க்கின்றோம்.
இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை

View My Stats