Friday, November 13, 2015

Sanitary worker died with electric shock from a garbage bin



மதுரையில் மீண்டும் ஒரு தூய்மை தொழிலாளி கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி மரணம்.
""""""""""""""""""""""""
மதுரை கிழக்கு மண்டலத்தில் தூய்மை தொழிலாராக பணியாற்றி வந்த அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியை சேர்ந்த தற்காலிக தூய்மை தொழிலாளி 29 வயது முத்து என்பவர் இன்று மதியம் 1.10 மணியளவில் மதுரை கணேஷ் திரையரங்கம் அருகில் குப்பைத்தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

மதுரை கிழக்கு மண்டலம்(3)
முத்து(27) பெருமாள் வெள்ளகல்
இன்று மதியம் 1,10 மணிக்கு குப்பை பெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி முத்து பரிதாபமாக உயிரிளந்தார்
இது சம்மந்தமாக அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து அரசு அதிகாரிகலிடம்
மூன்று அம்ச கோரிக்கை முன்வைத்தனர்
1) இறந்த முத்து அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
2) 10 லட்சம் நிவாரண நிதி
3) இறுதி சடங்கு செய்ய 20 ஆயிரம் ரூபாய் உடனே வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது
மேலும் மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் 3 வது மண்டலத்தில் உள்ளிருப்பு போராட்டம்.




தூய்மை தொழிலாளி முத்துவின் மரணத்திற்கு நீதிகேட்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுருத்தி ஆதித்தமிழர் பேரவை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் இரா.செல்வம் அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கின்றார்.
கோரிக்கைகள்
""""""""""""""""""""""""
1) இறந்தவரின் குடும்பத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை 10 லட்சத்தை உடனே வழங்க வேண்டும்.
2) இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை உடனேவழங்க வேண்டும்.
3) இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய அரசு வழங்கும் 20 ஆயிரம் ஈமசடங்கு தொகையை உடனே வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தற்போது 3 வது மண்டலத்தில் தோழர்கள் போராட்டத்தின் எதிரொலியாக...
கடந்த 16.10.2015 அன்று ஆரப்பளையத்தில் கழிவடைப்பை நீக்கும் போது உயிரிழந்த விஸ்வநாதன், முனியாண்டி குடும்பத்தாருக்கு அவசரம் அவசரமாக 10 லட்சம் இழப்பீட்டு தொகையை கொண்டு போய் கொடுக்கின்றது நிர்வாகம்.
இந்நிலையில் முத்துவின் மரணத்திற்கு நீதிகிடைக்கும் வரை போரட்டத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என்று ஆதித்தமிழர் பேரவையினர் போராட்ட களத்தில் நிற்கின்றனர்.
==>தகவல்
இரா.செல்வம், செயலாளர்,
மதுரை தெற்கு மாவட்டம்.
ஆதித்தமிழர் பேரவை

https://www.facebook.com/veeraarunthathiyan

No comments:


View My Stats